மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை (நவம்பர் 12) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துப் பொலன்னறுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.