ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை, ஐந்து பேரின் திட்டத்திற்கமையவே இடம்பெற்றுள்ளமை காவல்துறையினரின் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போதே இந்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கெஹெல்பத்தர பத்மே, கொமான்டோ சலிந்த, தருண், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிதாரியாக செயற்பட்ட சமிந்து டில்ஷான் ஆகியோர் இந்த கொலையைத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க அறைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

