1767513081 CREW 6
செய்திகள்இலங்கை

4.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்: ஃபிட்ஸ் ஏர் பெண் ஊழியர் கட்டுநாயக்கவில் கைது!

Share

சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் இன்று (04) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஆவார். இவர் ஃபிட்ஸ் ஏர் (FitsAir) விமான நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

குறித்த பெண் தான் பணியாற்றிய விமானத்தின் மூலமாகவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். தனது பயணப் பைக்குள் (Luggage) மிகவும் சூட்சுமமான முறையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்துள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள விமான ஊழியர்களுக்கான விசேட வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டதில் தங்கம் சிக்கியுள்ளது.

அவரிடமிருந்து மொத்தம் 1 கிலோ கிராம் மற்றும் 163 கிராம் எடையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் ஊழியரிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதன் பின்னணியில் ஏதேனும் கடத்தல் கும்பல் உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...