2026-இன் முதல் சந்திரகிரகணம்: 82 நிமிடங்கள் இரத்தச் சிவப்பில் காட்சியளிக்கப்போகும் சந்திரன்!

articles2FKpfcWs9EHIwAeffgx1YF

2026-ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகண நிகழ்வு வரும் மார்ச் மாதம் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தின் போது சந்திரன் வழக்கத்திற்கு மாறாக அடர் சிவப்பு நிறத்தில் (Blood Moon) காட்சியளிக்கவுள்ளமை விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானியல் தரவுகளின்படி, நிலவு முழுமையாக மறைக்கப்படும் நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும். வளிமண்டல மாற்றங்களைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த அரிய நிகழ்வு சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்காசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காண முடியும் என்றும், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள், அந்தந்த ஊர் உள்ளூர் நேரத்தைப் பொறுத்தும், வானில் நிலவு இருக்கும் நிலையைப் பொறுத்தும் இந்த கிரகணத்தை ஓரளவிற்குத் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கிரகணம் கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில்: மார்ச் 3 அன்று இரவு நேரத்தில் இந்த கிரகணம் தெரியும். வட அமெரிக்காவில் மார்ச் 3 அன்று அதிகாலையில் இது நிகழும். இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மார்ச் 3 அன்று மாலை சுமார் 02:14 மணிக்கு தொடங்கி இரவு 07:53 மணி வரை நீடிக்கும்.

 

 

 

Exit mobile version