புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (06) காலை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
இன்றைய அமர்வில் தேர்தல் முறைமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இன்றைய நாடாளுமன்ற நேர அட்டவணை:நேரம்விடயம்
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 3.30 (i) கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.
(ii) கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 3.30 – பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 5.30 மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றினை நியமிப்பதற்கான பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது.