கண்டி பல்லேகலை தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தீயணைப்பு வாகனங்கள் விரைவு!

1762390683 Sri Lanka Pallekele Kandy fire 6

கண்டி – பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இன்று (நவம்பர் 06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக, கண்டி தீயணைப்புப் படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Exit mobile version