பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

black flag

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக” பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தாயகச் செயலணி அறிவித்துள்ளது.

றிலங்காவின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை தமிழர் தேசத்தின் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“தாயகச் செயலணி” ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.
அன்றைய தினத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து பேரணியொன்றும் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி காலை 10 மணிக்கு தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் பேரணி நடைபெறவுள்ளது.இதேவேளை, குறித்த பேரணியில் வலியுறுத்தப்படவுள்ள கோரிக்கைகள் தொடர்பிலும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், நடைபெறவுள்ள குறித்த கரிநாள் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version