ஒயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (12) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் சுமார் 1:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.முச்சக்கர வண்டியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இரு வாகனங்களிலும் பயணித்த ஆறு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒயாமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்களின் அதிக வேகம் அல்லது கவனக்குறைவு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

