பிரபல பெண் ஊடகவியலாளர் துப்பாக்கி சூட்டில் பலி!

WhatsApp Image 2022 01 24 at 9.23.36 PM

மெக்ஸிகோவின் பிரபல பெண் பத்திரிகையாளரான லூர்து மல்டோனடோ லோபஸ் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கடந்த ஒரு வார காலத்தில் மெக்சிகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் தற்போது வரைக்கும் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Exit mobile version