கொழும்பில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுக்கு வந்த இரகசியத் தகவலை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மோசடியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 27 போலி சாரதி அனுமதிப் பத்திரங்களும் 41 காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களும், சில அச்சிடல் உபகரணங்க்ளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சாரதி அனுமதி பத்திரம் பெறாதவர்களுக்கு ரூபா. 12 ஆயிரத்தை செலுத்தி 5நிமிடங்களில் போலி அனுமதி அட்டையை வழங்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீண்டகாலமாகவே வாகனம் ஓட்டும் பயிற்சி இல்லாதவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாதவர்களுக்கும் இங்கு போலி அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இப்போலி அனுமதி பத்திரங்களுக்கான உபகரணங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews