தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் நீர்நிலைகளின் ஆழம் மற்றும் தரைப்பகுதியின் தன்மை மாறியிருக்கலாம். அறிமுகமில்லாத நீர்நிலைகளில் இறங்குவதற்கு முன்னர், அங்குள்ளவர்களிடம் அதன் பாதுகாப்பைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்கு நன்கு தெரிந்த இடங்களாக இருந்தாலும், அனர்த்தங்களுக்குப் பிறகு அவற்றின் ஆழம் அதிகரித்திருக்கக் கூடும் என்பதால் மேலோட்டமான கணிப்பில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலம் என்பதால், வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, பயணங்களின் போதும் கொண்டாட்டங்களின் போதும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.