முல்லைத்தீவில் சிறுமி மரணம்: 6 பேர் கொண்ட நிபுணர் குழு இன்று விசாரணையை ஆரம்பிக்கிறது!

25 694d12fa09782

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், தமது விசாரணைகளை இன்று (26) ஆரம்பிக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். உமாசங்கரின் பரிந்துரைக்கமைய, விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும், மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படாமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதியான விசாரணை கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்தே இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

 

 

Exit mobile version