ஒமைக்ரோனுக்கு எதிராக பிரத்தியேக தடுப்பூசிகள்!!

adar poonawalla

ஒமைக்ரோனுக்கு எதிராக பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிப்பது சாத்தியம் என சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத் தலைவர்  அதார் பூனாவாலா  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த வைரஸ் பற்றி மேலும் தகவல் கிடைக்கும்போது இதைப்பற்றி துல்லியமான முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகத் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படாது என ஃபைஸர், பயோ என்டெக் நிறுவனங்கள் கைவிரித்துவிட்ட நிலையில், தற்போது மாடர்னா நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய தடுப்பூசியைக் கொண்டு வரலாம். அது பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தப்படலாம்.

அத்துடன் ஒமைக்ரானுக்கு எதிராக பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிப்பது சாத்தியம் என சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத் தலைவர் அதார் பூனாவாலா   தெரிவித்துள்ளார்.

#WordNews

Exit mobile version