சமீபகாலமாக இலங்கையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இவ் எரிவாயு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில்,
அண்மைக் காலமாக எல்.பி எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் விபத்துக்கள் ஏதும் பதிவாகவில்லை. நுகர்வோரின் முறையற்ற பாவனையே வெடிப்பிற்கு காரணம் என லாப்ஸ் எரிவாயு நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது – என்றுள்ளது.
மேலும், அதீத திரவ பெற்றோலிய வாயு கசிவுதான் கடந்த 20ஆம் திகதி கொழும்பு பந்தய மைதானத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் தீ பரவியமைக்கான பிரதான காரணம் எனவும் சுட்டிகாட்டியுள்ளது.
#SriLankaNews