வவுனியா ஈச்சங்குளத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்துக்கு அருகில் மழையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

Screenshot 2025 11 28 000113

கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (நவம்27) மாலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் உள்ளது. எனவே, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.

கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் திரண்ட மக்கள், உணர்வுபூர்வமான முறையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.

Exit mobile version