சாவகச்சேரியில் மின்மயானம் – ஆரம்பகட்ட கலந்துரையாடல் வெற்றி!!

84255

சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்மயானம் அமைப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி நகர சபையின் பொன் விழா மண்டபத்தில் நேற்று நகர சபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் சகல தரப்பினரையும் உள்வாங்கும் வகையில் மயான அபிவிருத்தி குழு ஒன்றினை முதலில் நிறுவி குறித்த குழுவின் ஊடாக மென்மையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

சாவகச்சேரியில் மின்மயானம் அமைப்பதற்கு தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்க முன்னராகவே 17 லட்சம் ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டிருப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

#LocalNews

 

Exit mobile version