கிளிநொச்சியில் மின்தகன மயானம்!

அருணாசலம் வேழமாலிகிதன்

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்.

அதேபோல புலம்பெயர் அமைப்பு ஒன்றும் ஒரு கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.

மின் தகன மயானம் அமைக்கும் நடவடிக்கை தொடர்பான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

Exit mobile version