அம்பாறையில் முட்டை விலை குறைவு: வெள்ளை முட்டை ரூ.25-க்கு விற்பனை

image 1000x630 9

அம்பாறை மாவட்டத்தில் தற்போது வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து சிறிய வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட முட்டைகள், காரைதீவு மற்றும் கல்முனை மாநகரப் பிரதேசங்கள் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த முட்டைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்வதாக முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்தில் சந்தை நிலவரம் குறித்த தெளிவான புரிதல் இன்றி, ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் முட்டைகளின் விலை குறைக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான கருத்து தொடர்பாக, மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதாகவும் முட்டை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இத்தகைய விடயங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட தரப்பினரை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Exit mobile version