முட்டை விலை இனி 50/=!!

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு

எதிர்காலத்தில் முட்டையின் விலை 50 ரூபா வரை அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவனங்களான சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை தீவன மூட்டை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் 80 இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன் அந்த மாகாணத்தில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், ஒரு முட்டையின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும்போது, ​​தற்போதைய சந்தை விலையில் முட்டையை விற்க முடியாமல் சுமார் 20% உற்பத்தியாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர்.

எனவே, இப்பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை விலை ரூ.50 ஆக உயர்வதை யாராலும் தடுக்கமுடியாது என்றார்.

#SrilankaNews

 

Exit mobile version