கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

image 95f229676a

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகப் போதைப் பொருள்களைக் கடத்திவந்த ஆறு அதிவிரைவு படகுகளை அமெரிக்கப் படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்தின. இந்தப் படகுகள் வெனிசுலாவில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவங்களுக்கு மத்தியில், கரீபியன் கடல் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல், பாதியளவு தண்ணீரில் மூழ்கியபடி வேகமாகச் சென்றுள்ளது. அதில் இருந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அது போதைப் பொருள்கள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் என உறுதி செய்யப்பட்டவுடன், அமெரிக்கப் படைகள் நடுக்கடலில் குண்டு வீசி அதனைத் தகர்த்தன. இந்தத் தாக்குதலில் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். அவர்கள் ஈக்குவடார் மற்றும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

Exit mobile version