ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தனது ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னியைச் (Mark Carney) சந்திக்க விருப்பமில்லை என்று திடீரெனத் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்தார்.
அவர் தெரிவித்ததாவது: “நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. இன்னும் சிறிது காலம் நான் அவரைச் சந்திக்கப் போவதில்லை. கனடாவுடன் தற்போது செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. அதைச் செயல்படுத்த உள்ளோம்.”
ட்ரம்ப்பின் இந்தக் கருத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தனக்கு மகிழ்ச்சி இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

