2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன் மற்றொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார் .விசாரணையின்போது ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததால் இரண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது.
பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம்செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஓக்லஹோமா மாகாணமும் ஒன்று கடந்த 2015ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டது.
அந்தத் தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு 3 விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருபத்தி மூன்று மாநிலங்களில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a comment