25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

Share

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப் பதவி விலகச் சொல்வது கேலிக்கூத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட உரையில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அமைச்சர்களைப் பதவி விலகக் கூறும் குறித்த நபருக்கு முதுகெலும்பு இருந்தால், உங்கள் பிள்ளைகளின் இருப்பிடம் பற்றித் தெரிவிக்க முடியுமா? அது தொடர்பிலான துணிச்சல் அவருக்கு இருக்கின்றதா?” என இளங்குமரன் கேள்வியெழுப்பினார்.

மேலும் “நாடாளுமன்றில் கமராக்களுக்கு முன்னால் வீரவசனம் பேசுபவரும் இருக்கின்றார். ‘மம நம’ என கூறியதற்காக விமர்சிக்கின்றார். ஆனால் அவரால் தமிழில் ஒரு முகநூல் பதிவைச் சரியாக வெளியிட முடியவில்லை.”

ஆனால் தமிழர்களைக் கொன்று அழித்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பகின்றார்கள். இவை ஒன்றும் மக்களுக்கானதில்லை. அவரது கதையால் ஒருபோதும் யாழ். மாவட்டம் முன்னேறாது.

“இனவாத வலையேற்பட்டபோது, எதிர் தரப்பில் இருந்த தமிழ் மற்றம் சிங்கள எம்.பிக்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைந்திருந்தனர். இவர்களால் இனவாத அரசியலையே முன்னெடுக்க முடியும்,” என்று இளங்குமரன் குற்றம் சாட்டினார்.

“இனவாதத்தால் பாதிக்கப்படப்போவது இங்குள்ள எம்.பிக்களின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் தென்பகுதியில் கல்வி கற்று வேறு வேறு நாடுகளில் உள்ளனர். ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழர் பகுதியில் வாழும் எதிர்காலச் சந்ததியினரே,” என்றார்.

இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்:

“சபாநாயகரே, இவர் இன்று வலுசக்தி அமைச்சு தொடர்பில் கதைத்த விடயங்கள் என்ன? எதுவும் இல்லை. நிலையியல் கட்டளையின் படி நேற்றுப் பிரேரணைக்கு முரணாகக் கதைத்ததற்காக எனது நேரத்தை இல்லாது செய்தீர்கள். ஆனால் இன்று அவ்வாறு நடக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...