திருகோணமலை – கொழும்பு கோட்டை இடையிலான பகல்நேர நேரடி புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்!

images 2 5

திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான நேரடி பகல்நேர புகையிரத சேவை நாளை சனிக்கிழமை (டிசம்பர் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி 7084 இலக்க புகையிரதம் காலை 7 மணிக்கு புறப்படும்,அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து 7083 இலக்க புகையிரதம் திருகோணமலை நோக்கி காலை 6 மணிக்கு புறப்படும்.

இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.

 

 

Exit mobile version