திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான நேரடி பகல்நேர புகையிரத சேவை நாளை சனிக்கிழமை (டிசம்பர் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி 7084 இலக்க புகையிரதம் காலை 7 மணிக்கு புறப்படும்,அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து 7083 இலக்க புகையிரதம் திருகோணமலை நோக்கி காலை 6 மணிக்கு புறப்படும்.
இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.