யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று (அக்22) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்குப் பிறப்பிலேயே கை, கால்களின் செயற்பாடுகள் அற்றுப் போதிய இயக்கமின்மையுடன் காணப்பட்டார்.
நேற்று முற்பகல் 10 மணியளவில், இவர் தனது வாயினால் மின்சார ஆளியினுள் (Switch) மின் இணைப்புக்காக வயரைச் செருக முற்படும்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.