யாழ்ப்பாணம் திருகோணமலைக்கிடையே சேவையில் ஈடுபடும் திருகோணமலை சாலைக்கு சொந்தமான அரசபேருந்து இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கிடையே சேவையை ஆரம்பித்த பேருந்தின் முன்சில்லு கழன்றதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
எனினும் சாரதியின் சாமர்த்தியத்தால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SrilankaNEws