மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் தனுஷ் – ஐஸ்வர்யா இணை!!

Dhanush uh4jfObfeagja

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பழையபடி தமது வாழ்க்கையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்திருந்தனர்.

எனினும் தனுஷ் – ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பெற்றோர் பிரிவு குறித்து கேட்ட ஒரே ஒரு கேள்வி இருவரையும் மீண்டும் இணைக்கவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்தால் நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் என யாத்ராவிடம் கேட்டதற்கு, ‘என் அம்மாவிடம் அவருடைய அப்பா அல்லது அம்மா இருவரில் யாராவது ஒருவருடன் தான் இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் இதே கேள்வியை எனது அப்பாவிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் திருப்பி கேள்வி கேட்டுள்ளான் சுட்டிப்பையன் யாத்ரா?

மேலும் ,யாத்ராவின் இந்த கேள்வி குறித்து ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்ததாகவும் இந்த கேள்விக்கு அவர்கள் இருவராலும் பதில் சொல்ல முடியாததால் திக்குமுக்காடி போயுள்ளனராம்.

இதனால் மகன்களின் எதிர்காலம் கருதி மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

Exit mobile version