ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: நாளை மாலை இலங்கை கடற்கரையைக் கடக்கிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Weather 1

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை இலங்கையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (09) பிற்பகல் 3.30 மணியளவில், இந்தத் தாழ்வு மண்டலம் மட்டக்களப்பிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.

இது நாளை மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாகக் கணிக்கப்பட்ட நேரத்தை விடத் தாமதமாகவே இது இலங்கைக்குள் நுழைகிறது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்தத் தாழ்வு மண்டலம் குறித்து சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமையகடற்பரப்புக்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், திருகோணமலை முதல் யாழ்ப்பாணம் வரையான ஆழ்கடல் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version