24 66f57d7b97089
செய்திகள்

நள்ளிரவு முதல் பழைய முறைப்படியே விசா: அநுர அரசாங்கத்தின் அதிரடி நகர்வு

Share

நள்ளிரவு முதல் பழைய முறைப்படியே விசா: அநுர அரசாங்கத்தின் அதிரடி நகர்வு

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில், “VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது நிகழ்நிலையில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும்.

மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...

world 144
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கதிர்காம தேவாலயத்தின் இரு பிரதான பூசைகள் ரத்து: நாளை இரவு சித்திரைத் திருவிழா ஊர்வலம் ஆரம்பம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலத்தைக் கருத்திற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு...

world 143
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பரபரப்பு: கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (ஏப்ரல் 13) சிசு ஒன்றின் சடலம்...