“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

25 68fb438418a4b

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இன்று (அக்டோபர் 24, 2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

“தன்னைக் கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபர், களுத்துறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.”

“வீட்டிலிருந்து வெளியே வரும் போது, என்னைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.””எனவே, குறித்த அச்சுறுத்தல் தொடர்பாகச் சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனப் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உறுதியளித்துள்ளார்.

Exit mobile version