டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) ஆற்றிய விசேட உரையின் போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 பேருக்கு உரிய சட்டபூர்வ மரணச் சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்படாத உடலங்கள்: மீட்கப்பட்ட சில உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், அவற்றின் விபரங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேரழிவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் காப்புறுதி (Insurance), இழப்பீடுகள் மற்றும் ஏனைய சட்டபூர்வ நன்மைகளைப் பெறுவதற்கு இந்த மரணச் சான்றிதழ்கள் மிக அவசியமானவை. அடையாளம் காணப்படாத உடலங்கள் குறித்து மரபணு (DNA) சோதனைகள் மூலம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

