1765278160 AL Exam Ministry of Edcuation Sri Lanka 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை : அனுமதிப் பத்திரத் திருத்தங்களுக்கான காலக்கெடு அறிவிப்பு!

Share

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் அவற்றை மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இந்த மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

நாடு முழுவதும் 3,545 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிபர்கள், வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து இவற்றைத் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கனவே அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்படின், பாடசாலை அதிபர்கள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று, தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...