தினமும் சாவு 35 – காயம் 12 ஆயிரம்!!

bh5lk67 car accident generic unsplash

திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் சராசரியாக 35 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் சுமார் 12,000 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஒரு ஆண்டில் சுமார் 3 முதல் 4 மில்லியன் பேர் வரையில் திடீர் விபத்துக்களுக்கு உள்ளாகுவதாகவும் திடீர் விபத்துக்கள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 12,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

#SrilankaNews

 

 

 

Exit mobile version