Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

Share

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை – சேருவில பகுதிக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து நிவாரணம் வழங்குவது அநீதியானது. பாதிக்கப்பட்ட முழு நாட்டு மக்களுக்கும் பாகுபாடின்றி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் தற்போது பின்பற்றும் சுற்றுநிரூபங்களின்படி நிவாரணம் வழங்கினால், பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதமானவர்களுக்குக் கூட உதவி கிடைக்காது. எனவே, அரசாங்கம் உணர்வுபூர்வமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்பட வேண்டும்.

கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் மற்றும் விகாரைகள் மூலம் பெறப்படும் நேரடித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நிவாரணங்களை விநியோகிக்க வேண்டும்.

மக்கள் வெறும் உணவுப் பொதிகளை மட்டும் எதிர்பார்க்கவில்லை; இழந்த வாழ்வாதாரத்தை மீட்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக, மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிகளில் வீடுகள் சேதமடையாவிட்டாலும், கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மறைமுகப் பாதிப்புகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் அசமந்தப்போக்கைக் கைவிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தொழில்களைத் தொடங்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...