கடற்றொழிலாளர்களுக்கு உயர் தர எரிபொருள்: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

23 641447ac26c1d

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், அவர்களுக்கு உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் புதிய வேலைத்திட்டத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation – CPC) ஆரம்பித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் இந்தத் திட்டம் நேற்று (ஒக் 27) உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, பொது நலன் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அரச நிறுவனங்கள் மூலம் ஈட்டப்படும் இலாபத்தை மீண்டும் முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும்

Exit mobile version