23 கோடியே 86 லட்சம் பேர் உலகளாவிய ரீதியில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஆரம்பித்து, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,86,30,012 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 48,66,952 பேர் உயிரிழந்துள்ளனர்.
21,57,90,696 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.