திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கிப் பலியாயினர். நீச்சல் தெரியாததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்த சிவமாதன் மகன் சிவா (வயது 21), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த சின்னராஜ் மகள் அபிநயா (18) ஆகியோரே சாவடைந்தனர்.
இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவுக்காக அபிநயா சென்றிருந்தார். அங்கு வன அலுவலகம் பின்புறம் உள்ள தடுப்பணையில் அபிநயா குளிக்கச் சென்றார்.
அப்போது நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காகத் தடுப்பணைக்குள் இறங்கினார். அபிநயாவைக் காப்பற்ற முயன்ற சிவாவும் தண்ணீரில் மூழ்கினார்.
நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக இறந்தனர்.
#IndianNews
Leave a comment