கஞ்சாவுக்கு அனுமதி வழங்கிய நாடு!

weed

நாட்டு பிரஜைகளுக்கு மோல்டா (Malta) அரசாங்கம் வீட்டுத் தோட்டத்தில் 4 கஞ்சா செடிகளை பயிரிடவும், 7 கிராம் கஞ்சாவை உடன் வைத்திருக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

ஆனால் கஞ்சாவை பகிரங்கமாக புகைக்கவோ அதனை பயன்படுத்தவோ அனுமதி அளிக்கப்படவில்லை. அத்தோடு குழந்தைகள் மத்தியில் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

#WorldNews

Exit mobile version