கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் வழக்கு: பிப்ரவரி 13-க்கு ஒத்திவைப்பு!

WhatsApp Image 2025 06 26 at 15.02.06

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைக் கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் நிபுனி கிருஷ்ணஜினா ஆகிய நால்வருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தமை மற்றும் முறைகேடான நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே தரமற்ற ‘இம்யூனோகுளோபுலின்’ தடுப்பூசி கொள்முதல் மோசடி தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இந்த ஊழல் வழக்கு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

 

 

Exit mobile version