பிரித்தானியாவில் 49 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது அங்கு அதிக குளிரான காலநிலை நிலவி வருவதால், கொரோனாத் தொற்று உயர்வடைந்துள்ளது.
அண்மித்த நாட்களில் அந்நாட்டில் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு 49 ஆயிரத்து 156 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாகவும், 78 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world