கொரோனாவின் கொடூரம் -ஒரே வாகனத்தில் 3 சடலங்கள்

russia 1

russia

கொரோனாவின் கொடூரம் காரணமாக  ஒரே வாகனத்தில் இரண்டு, மூன்று சடலங்களை ஏற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளமையை அடுத்து சாவுகள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

ரஷ்யாவில் கொரோனாவால் ஏற்படும் அடுத்தடுத்த சாவுகளால் ஒரே வாகனத்தில் இரண்டு, மூன்று சடலங்களை ஏற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அங்கு இதுவரை நடந்திராத வகையில் கடந்த ஒருநாளில் மட்டும் 1,159 பேர் கொரோனாவால் சாவடைந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சாவடைந்தவர்களை அடக்கம் செய்ய போதிய இடம் இல்லாததால் Nizhny Novgorod, Tomsk உள்ளிட்ட நகரங்களில் இடுகாடு பிரச்சினை ஏற்பட்டு புதிதாக இடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#world

Exit mobile version