விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்குக் கொரோனா

corona 4

விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

சிறுவன் பயணித்த மோட்டார் சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

குறித்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது

#SrilankaNews

Exit mobile version