ஐரோப்பாவை விட்டு விலகும் கொரோனா!

WhatsApp Image 2022 01 24 at 9.13.55 PM

ஐரோப்பாவிலிருந்து கொரோனா தொற்று நீங்கி வருவதாக ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்  தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 60 வீதம் வரை ஒமைக்ரோன் தோற்றுவிடும் .

அதன்பின் ஒமைக்ரோன் அலை குறைவடைந்து விடும். ஜனவரி 18ஆம் திகதி கணக்கின்படி ஐரோப்பியாவில் பதிவான புதிய தொற்றுக்களில் 15 சதவீதம் ஒமைக்ரோன் வைரஸால் ஏற்பட்டவை.

தொற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது அரசாங்கங்கள் தொற்றை தடுப்பதில் தீவிரம் காட்டுவது போல தொற்று குறைவடைந்து செல்கையில் மருத்துவமனையின் தேவைகளை குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடுவதை சீர் செய்வது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#World

Exit mobile version