மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

1732012733 1732005467 ruhunu university 600 1

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாகப் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே இந்தப் பல்கலைக்கழக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (அக்டோபர் 19) இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் புள்ளிகள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஆரம்பத்தில் மோதல் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இன்றும் (அக்டோபர் 20) இந்தச் சம்பவம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் சுமார் 06 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களைக் கம்புருபிட்டிய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version