Untitled 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான CEWET புலமைப்பரிசில்: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Share

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் கல்விப்புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்கள் அல்லது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது தொழில்நுட்பக் கல்வியினைத் தொடரும் மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரிகள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன்

01. பிறப்புச் சான்றிதழின் பிரதி

02.க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத்தாள் பிரதி

03.பெற்றோரின் வேதன விபரம் மற்றும் அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர் என்பதற்கான தோட்ட அதிகாரியின்         உறுதிப்படுத்தல் கடிதம்

04. மாணவரின் வங்கிச் சேமிப்புப் புத்தகத்தின் முதற்பக்கப் பிரதி

ஆகிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பப் படிவங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையதளமான www.hcicolombo.gov.in இலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அத்துடன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் (இல. 36-38, காலி வீதி, கொழும்பு-03) அல்லது கண்டியிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தில் (இல. 42, கபிலவஸ்து மாவத்தை) நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET), c/o இந்திய உயர்ஸ்தானிகராலயம், த.பெ. இலக்கம் 882, காலி வீதி, கொழும்பு-03″ என்ற முகவரிக்கு 2026 ஏப்ரல் 28ஆம் திகதிக்கு முன்னதாகக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...