தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை கித்துள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இராஜினாமா கடிதம் தமக்கு அனுப்பி வைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் பதவியை இராஜினாமா செய்யுமாறு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ராகம மருத்துவ பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதால் அதன் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment