தென்னை மரக்கன்றுகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பயன்பாடற்று கிடக்கும் வயல் நிலங்களில் தென்னை மரக்கன்றுகளை நாட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
தலா 500,000 ரூபாய்களை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வழங்கி குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து அமைச்சுக்களும் நிதி ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#SriLankaNews