குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment