இலங்கையில் மேலும் ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு மூடுவிழா!!

75504d578571730eb6ba07d6d604e40c

இலங்கையில் சுமார் 160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக குறித்த மின் நிலையத்தை மூட இடமளிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இன்று குறித்த மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று இருந்தனர்.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் போதுமானதாக உள்ளதால் நாளை வரை மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நாளைய தினத்தின் பின்னர் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



Exit mobile version